"ஒருத்தரின் உருவப்படத்தை எரிப்பது அந்த நபரை எரிப்பது போல அர்த்தமல்ல”... - திமுக வைஷ்ணவி திடீர் பல்டி!!
போகிப் பண்டிகையை முன்னிட்டு, தான் வைத்திருந்த தவெக டி-ஷர்ட்டை எரித்த வீடியோ வைரலான நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே அது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் வைஷ்ணவி தனது எக்ஸ் (X) தளத்தில் காரசாரமான விளக்கத்தைப் பதிவிட்டுள்ளார்.
உருவப் படத்தை எரிப்பது என்பது ஒரு தனிமனிதரை எரிப்பதற்குச் சமமானதல்ல என்று குறிப்பிட்டுள்ள அவர், தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்தப் பல வாதங்களை முன்வைத்துள்ளார்.
"ஒருவரின் உருவப் படத்தை எரிப்பது அந்த நபரை எரிப்பது போன்ற அர்த்தமல்ல. அது அவருடைய கொள்கைகளுக்கும், மக்களுக்கு எதிரான செயல்பாடுகளுக்கும் எதிரான ஒரு ஜனநாயகப் போராட்டமே" என்று அவர் கூறியுள்ளார்.
உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமி மற்றும் டொனால்ட் டிரம்ப் போன்ற முக்கியத் தலைவர்களின் உருவ பொம்மைகள் எரிக்கப்பட்டதை அவர் உதாரணங்களாகச் சுட்டிக்காட்டியுள்ளார். விஜய் அரசியல் தொடங்கிய பிறகு நடந்த விபத்துகளில் 41 உயிர்கள் பறிக்கப்பட்ட சம்பவங்களைக் குறிப்பிட்டு, "மக்களுக்காக அவர் முன்னெடுத்த பணிகள் என்ன?" என்ற கேள்வியையும் வைஷ்ணவி எழுப்பியுள்ளார்.

தவெக கட்சி சமூகப் பொறுப்பற்ற செயல்களையும், ஆபாச வாதங்களையும் ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள அவர், ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவது தனது உரிமை என்றும், எத்தகைய விமர்சனங்களையும் சந்திக்கத் தயார் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
