பேருந்தும், தனியார் டெம்போ வேனும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து… 6 பேர் பலி!
செங்கிப்பட்டி பாலத்தில் நடைபெற்று வந்த புனரமைப்பு பணிகள் காரணமாக, அந்தப் பகுதியில் ஒற்றை வழிப்பாதையில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டு இருந்தன. இந்நிலையில், தஞ்சாவூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் டெம்போ வேனும், திருச்சி நோக்கிப் பயணித்த அரசு பேருந்தும் பாலத்தில் மோதியதாக தெரிகிறது.
மோதலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், டெம்போ வேன் முற்றிலும் சேதமடைந்தது. இந்த விபத்தில் டெம்போவில் பயணம் செய்த 4 பேர், ஒரு பெண் உட்பட, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் உயிரிழந்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மற்றொருவரும் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை ஆறாக உயர்ந்தது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். படுகாயம் அடைந்தவர்கள் உடனடியாக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
