பஸ்–பைக் மோதல்: பிளஸ் 2 மாணவன் பலி!

 
விபத்து
 

குன்றத்தூர் அருகே அரசு பேருந்து மற்றும் பைக் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பிளஸ் 2 மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். குன்றத்தூர் அடுத்த இரண்டாம்கட்டளை சந்திரசேகரபுரம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்த கமலக்கண்ணனின் மகன் சரவணன் (17). குன்றத்தூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

ஆம்புலன்ஸ்

நேற்று மாலை பள்ளி முடிந்ததும் டியூஷனுக்கு சென்ற சரவணன், பின்னர் பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டார். குன்றத்தூரில் இருந்து பல்லாவரம் செல்லும் பிரதான சாலையில் ஆண்டாள்குப்பம் அருகே வந்தபோது, எதிரே வந்த அரசு பேருந்தும் பைக்கும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதின.

போலீஸ்

இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட சரவணன், தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் உடலை மீட்டு தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!