அதிகாலையில் அதிர்ச்சி… மின்கம்பத்தில் மோதி தீப்பற்றி எரிந்த பேருந்து…!
பெங்களூரு – துமகுரு தேசிய நெடுஞ்சாலையில் நெலமங்களா அருகே தனியார் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானது. அதிகாலை 3 மணி அளவில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து மின்கம்பத்தில் மோதியது. அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் பேருந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். பின்னர் நெலமங்களா போக்குவரத்து போலீசார் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். விபத்து நடந்த போது ஓட்டுநர் உட்பட 30க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் இருந்ததாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.
ஆனால் பேருந்தின் லக்கேஜ் பகுதியில் இருந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலானது. சமீப காலமாக கர்நாடகாவில் பேருந்து தீ விபத்துகள் அதிகரித்து வருவது கவலை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பு தவிர்க்கப்பட்டிருந்தாலும், இந்த சம்பவம் பயணிகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
