திருப்பூரில் அடுத்தடுத்து பஸ்கள் மோதல்… 20 பேர் படுகாயம்!
திருப்பூர், பல்லகவுண்டம்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு நோக்கி சென்ற 3 பஸ்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டது. முன்னால் சென்ற வாகனம் திடீரென பிரேக் போட்டதால் இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

விபத்தில் ஒரு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அதில் பயணம் செய்த 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து போக்குவரத்தை சீர்செய்தனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
