கார் மீது பேருந்து மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி; 13 பேர் படுகாயம்!
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு புண்ணியத் தலங்கள் மற்றும் சுற்றுலா இடங்களுக்குச் சென்று விட்டுத் திரும்பியபோது, சுற்றுலா கார் மீது பேருந்து மோதி இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.
கர்நாடகாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் ஒரு காரில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் முருதேஷ்வரர் கோவில், மரவந்தி கடற்கரை மற்றும் உடுப்பி கிருஷ்ணர் கோவில் ஆகிய இடங்களுக்குச் சென்று விட்டு, இறுதியாகத் தர்மஸ்தலாவிற்குப் புறப்பட்டுள்ளனர்.

நேற்று மதியம் 3 மணியளவில் உடுப்பி மாவட்டம் கர்கலா பஜகொலி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, எதிரே அதிவேகமாக வந்த ஆம்னி பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கார் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். காரில் இருந்த ஒரு குழந்தை உட்பட மற்ற 9 பேரும் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்த போலீசார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் விரைந்து செயல்பட்டு, காரில் சிக்கியிருந்தவர்களை மீட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து ஏற்படுத்திய பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிவேகமே இந்த விபத்திற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
