செல்போன் பேசியபடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்!

ஈரோடு உடுமலையில் ஒற்றை கையால் செல்போன் பேசியடி அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநரின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
உடுமலையில் இருந்து வீதம்பட்டி செல்லக்கூடிய 4ம் எண் அரசு பேருந்தில் ஓட்டுநர் செல்போனில் பேசியபடி நீண்ட நேரமாக ஒற்றைக் கையால் பேருந்தை இயக்கியுள்ளார்.
பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் அந்த ஓட்டுநர் பேருந்தை இயக்கியதை பயணம் செய்த பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடவே அந்த வீடியோ தற்போது வைரலாகியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செல்போன் பேசியபடி டிரைவர் பேருந்தை ஓட்டி சென்ற சம்பவம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில்,போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்தை ஓட்டி சென்ற சந்திரசேகரை (62) பணிக்கு வர வேண்டாம் என கூறி வேலையில் இருந்து நிறுத்தினர்.
ஏற்கனவே ஓட்டுநராக பணியாற்றி ஓய்வு பெற்ற சந்திரசேகர் தற்போது தற்காலிகமாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!