பேருந்து ஓட்டுநருக்கு கொலை மிரட்டல்... போதையில் இளைஞர்கள் அட்டூழியம்!

 
போதை ஓட்டுநர்

தமிழகத்தில் டாஸ்மாக் மட்டுமல்லாமல் சமீப காலங்களாக போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. போதைப் புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே இது வேகமாக பரவி வருகிறது. 

இந்நிலையில், பல குற்றச்செயல்களின் பின்னணியில் ஏதுமறியா இளைஞர்களும், 18 வயது கூட நிரம்பாத சிறார்களும் போதைக்கு அடிமையாக்கப்பட்டு ஈடுபடுத்தப்படும் சம்பவங்களும் அதிர்ச்சியளிக்கின்றன.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் இருந்து ஆந்திராவிற்கு தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. திருத்தணி பைபாஸ் ரோடு பகுதியில் மோட்டார் சைக்கிளை பேருந்து முன்பு நிறுத்தி வைத்து மது போதையில் வந்த இளைஞர்கள் பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தைகளால் இளைஞர்கள் பேசினர். 

சிசிடிவி

அவர்கள்  மது போதையில் இருந்ததால்  40 நிமிடம் சாலை நடுவே  ரகளையில் ஈடுபட்டனர். இதனால் திருப்பதி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சித்தூர், ஆகிய வழியாக செல்ல வேண்டிய அனைத்து வாகனங்களும் ஆங்காங்கே நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  பேருந்து ஓட்டுனரை எச்சரிக்கை செய்துவிட்டு  போதை இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டனர். 

சிசிடிவி

இச்சம்பவம் குறித்து தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார்   சினிமா பாணியில் துரத்தி சென்று மது போதை இளைஞர்களை பிடித்தனர். தகராறில் ஈடுபட்ட இளைஞர்களின் இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் எடுத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரபரப்பு  காணப்பட்டது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது