வைரல் வீடியோ!! பெண் பயணிகளை ஏற்றாததால் பேருந்து டிரைவர் சஸ்பெண்ட்!!

தமிழகத்தில் பெண்கள் குழந்தைகள் அனைவருக்கும் அரசு பேருந்தில் பயணிக்க இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே இந்தியாவின் பல மாநிலங்களில் பெண்களுக்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில் தலைநகர் டெல்லியில் 2019 அக்டோபர் மாதம் முதல் அரசு பஸ்சில் பெண் பயணிகள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமலில் உள்ளது.
દિલ્હીમાં બસોમાં મહિલાઓને ફ્રી મુસાફરી હોવાથી ડ્રાઇવરો મહિલાઓને જોઈને બસ રોકતા નથી. દિલ્હીના મુખ્યમંત્રી અરવિંદ કેજરીવાલે આ વીડિયો શેર કરતા જણાવ્યું છે કે આ બસ ચાલાક વિરુદ્ધ કડક કાર્યવાહી કરવામાં આવશે#delhi #Ladies #bus #ArvindKejriwal #aap #tweet #FreeServices pic.twitter.com/YfeJcF9yZB
— GSTV (@GSTV_NEWS) May 18, 2023
இந்த திட்டம் மூலம் அரசு பஸ்சில் பெண் பயணிகள் கட்டணமின்றி பயணிக்கலாம். டெல்லியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த 3 பெண் பயணிகள் பேருந்து வந்து நின்றதும் அதில் ஏற முயற்சித்துள்ளனர். ஆனால், அந்த பேருந்து பெண் பயணிகளை ஏற்றாமல் வேகமாக சென்று விட்டது. ஒரு பயணி பேருந்தில் இருந்து கீழே இறங்கிய உடன் பெண் பயணிகளை ஏற்றாமல் டிரைவர் பேருந்தை வேகமாக இயக்கினார்.
இதனால், பெண் பயணிகள் பேருந்தில் ஏற முடியவில்லை. இது குறித்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற பேருந்து டிரைவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மேலும், பெண் பயணிகளை பஸ் டிரைவர்கள் ஏற்றாமல் செல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பேருந்து டிரைவர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தில் கட்டாயம் பேருந்தை நிறுத்த வேண்டும் என டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!