சீட் பிடிப்பதில் தகராறு... பேருந்து ஓட்டுநரின் மண்டையை உடைத்த பயணிகள்!
திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் பேருந்தில் இடம்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் தனியார் பேருந்து ஓட்டுநர் தாக்கப்பட்டு படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைப்பூசத்தை முன்னிட்டு பழனி செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், பேருந்துகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. இதனால் இடம்பிடிக்க பயணிகள் இடையே கடும் போட்டி நிலவியது.

இந்த நிலையில் பழனி செல்லும் தனியார் பேருந்து ஒன்று நீண்ட நேரம் நின்றிருந்தது. ஓட்டுநர் விளக்கை ஏற்றியதும் பேருந்து கிளம்பப் போகிறது என நினைத்து பயணிகள் முண்டியடித்து ஏறினர். ஆனால் இன்னும் நேரம் உள்ளது, அனைவரும் கீழே இறங்குங்கள் என ஓட்டுநர் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அந்த வாக்குவாதம் முற்றி, அடாவடி கும்பல் ஓட்டுநரை பேருந்துக்குள்ளேயே சரமாரியாக தாக்கியது.
தலையில் பலத்த காயமடைந்த ஓட்டுநர் பஷீர் அகமது ரத்தம் சொட்ட கீழே இறங்கினார். இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் மீண்டும் பொதுமக்கள் முன்னிலையில் அவரை தாக்கியது. தட்டிக் கேட்ட மற்ற ஓட்டுநர்கள், நடத்துனர்களும் தாக்கப்பட்டதால் பேருந்து நிலையமே கலவரக் காடாக மாறியது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த ஓட்டுநரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, தாக்குதலில் ஈடுபட்ட மூன்று பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
