கால்வாயில் கவிழ்ந்த பேருந்து.. கோர விபத்தில் சிக்கி குழந்தைகள் உட்பட 6 பேர் பலியான சோகம்!

பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் மாவட்டத்தில் நடந்த தனியார் பேருந்து விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர், 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்தில் 25க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. இன்று (பிப்ரவரி 18) காலை 8 மணியளவில் ஃபரித்கோட்-கோட்கபுரா சாலையில் 36 பயணிகளுடன் ஒரு தனியார் பேருந்து அமிர்தசரஸுக்குச் சென்று கொண்டிருந்தது.
அப்போது, ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து ஒரு லாரியில் மோதியது. இதில், பேருந்து 10 அடி உயர பாலத்தில் இருந்து கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்த 25க்கும் மேற்பட்ட பயணிகளை முதன்மை சிகிச்சைக்காக ஃபரித்கோட்டில் உள்ள குரு கோபிந்த் சிங் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றினர்.
காயமடைந்தவர்களில் இருவர் அமிர்தசரஸில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் விபத்தில் ஒரு கையை இழந்ததாகக் கூறப்படுகிறது. போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!