அதிர்ச்சி.. உத்தரகாண்ட்டில் பேருந்து கவிழ்ந்து விபத்து... பலி எண்ணிக்கை 28 ஆக உயர்வு... தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் ராம்நகர் அருகே பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்பிருப்பதாக அஞ்சப்படுகிறது .பேருந்தில் அதிக பாரம் ஏற்றப்பட்டதாகவும், பல குழந்தைகளும் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
#WATCH | Uttarakhand: A Garwal Motors Users' bus fell into a gorge near Kupi in Ramnagar at Pauri-Almora border. Deaths and injuries feared. Search and rescue operation underway. Details awaited.
— ANI (@ANI) November 4, 2024
(Video: SDRF) pic.twitter.com/dzSgKw6tkF
அல்மோராவில் உள்ள மார்ச்சுலா என்ற இடத்தில் கார்வாலில் இருந்து குமாவோனுக்கு சென்றுக் கொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழந்து விபத்திற்குள்ளானதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பேருந்து வேகத்தில் சென்றுக் கொண்டிருந்த போது 200 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்துள்ளது. இந்த பேருந்தில் சுமார் 40 பயணிகள் இருந்ததாக தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்க அம்மாவட்ட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விபத்து சம்பவம் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த ஆணையர் குமாவோன் பிரிவுக்கு முதல்வர் தாமி உத்தரவிட்டார்.
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை...
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
இந்த 8 நட்சத்திரக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை... வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க!