பள்ளத்தாக்கில் கவிழ்ந்த சென்னை பேருந்து… 3 பேர் பலி, பலர் காயம்!
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியில் 30 பயணிகளுடன் சென்ற சென்னை பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. கல்சி பகுதியில் நேற்று (பிப்.3) நடந்த இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 2 பெண்கள் உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

விபத்தில் காயமடைந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்களை மீட்பு குழுவினர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் சிலர் லேசான காயங்களுடன் உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் SDRF மீட்பு படையினர் மற்றும் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
