திக் திக் வீடியோ... தண்டவாளத்தில் திடீரென நின்ற பேருந்து… எதிரே வந்த எக்ஸ்பிரஸ் ரயில்!

 
 ரயில்

கர்நாடக மாநிலத்தில்  பெங்களூருவில் நகர்ப்புற போக்குவரத்துக் கழகம் சார்பில் மாலிக்கொண்டனஹல்லி முதல் கே.ஆர் மார்க்கெட் வரை பேருந்து ஒன்று இயக்கப்பட்டு வருகிறது.  இந்த பேருந்து  காலை 7.15 மணிக்கு  ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயற்சிக்கும்போது திடீரென பிரேக் பிரச்சனை ஏற்பட்டு ரயில்வே தண்டவாளத்தின் நடுவே நின்று விட்டது.


அதே நேரத்தில்  மைசூர்- சென்னை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்,  கச்சிகுடா- மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வேகமாக பேருந்தை நோக்கி  நெருங்கி வந்ததாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து  ரயில்வே பாதுகாப்பு இன்டர்லாக்கிங் அமைப்பை உடனடியாக செயல்படுத்தியதால் ரயில்கள்  நிறுத்தப்பட்டு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து ரயில்வே குழுவினர்  பேருந்து டிரைவர் என்ஜினை மீண்டும் ஸ்டார்ட் செய்யும் போது பேருந்தின் கியர் சேர்ந்து இருந்த நிலையில் ஏர்லாக் பிரச்சனை ஏற்பட்டது.  இதனால் பேருந்து திடீரென தண்டவாளத்தில் நின்றுவிட்டது. இது குறித்து அறிந்த ரயில்வே அதிகாரிகள் உடனடியாக அவசர நடவடிக்கைகள் மேற்கொண்டு கெங்கேரி டிப்போவில் இருந்து ஒரு கிரேன் அனுப்பப்பட்டு காலையில் 7:35 மணிக்கு  அந்தப் பேருந்து ரயில்வே தடத்திலிருந்து அகற்றப்பட்டது.
இருப்பினும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் அனைத்தும் 35 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டதால் தாமதம் ஏற்பட்டது. இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி ரயில்வே கிராசிங்களின் பாதுகாப்பு மற்றும் பொது போக்குவரத்து வாகனங்களின் பராமரிப்பு குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web