ஆட்டோ ஓட்டுநரை அடித்துக்கொலை செய்த பேருந்து ஊழியர்கள் ... பயணிகளை ஏற்றுவதில் தகராறில் வெறிச்செயல்.!

 
அப்துல்

கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம், வடமாகினா பகுதியில் வசித்து வருபவர் அப்துல் லத்தீப். இவர் ஆட்டோ ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் சம்பவ நாளில் வடமாகினா பேருந்து நிறுத்தத்தில் இருந்தார். ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு இருந்தார்.  அப்போது, அங்கு வந்த தனியார் பேருந்து ஊழியர்கள் 3 பேர், அப்துலின் ஆட்டோவை துரத்தி இடைமறித்தனர்.  

அப்துல்

ஆட்டோவில் இருந்து இறங்கிய அப்துலை மூவரும் சரமாரியாக தாக்கி இருக்கின்றனர். இச்சம்பவத்தில் படுகாயம் அடைந்த அப்துல், சுருண்டு விழுந்தார். இந்த தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், அப்துலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

உத்தரபிரதேச போலீஸ்

அங்கு அவர்களின்  மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, தாக்குதல் நடத்திய முகமது நிஷாத், சுஜித், சஜூ  3 பேரும்  கைது செய்யப்பட்டனர். விசாரணையில், பயணிகள் ஏற்றுவது தொடர்பாக ஆட்டோ - பேருந்துக்கு இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதன் அடிப்படையில் இந்த  கொலை நடந்திருக்கலாம் என முதல்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.  

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?