பேருந்தில் கத்தியால் குத்த வந்த திருடனை ஒற்றை ஆளாக அடக்கிய பயணி .... வைரல் வீடியோ!
ஐரோப்பாவில் நடந்த சம்பவம் என பரவி வரும் வைரல் வீடியோ, உண்மையில் 2017ஆம் ஆண்டு கொலம்பியா நாட்டின் பொகோட்டா நகரில் உள்ள ஒரு பேருந்தில் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் வெள்ளை நிற சட்டை அணிந்த நபர் ஒருவர், பேருந்தில் இருந்த முதிய பெண்ணை துன்புறுத்த அல்லது திருட முயன்றதாக கூறப்படுகிறது.
Imagine using public transport in Europe. pic.twitter.com/IxNAiKIOaH
— Catch Up (@CatchUpFeed) February 2, 2026
இதைக் கண்ட நீல நிற சட்டை அணிந்த பயணி ஒருவர் உடனடியாக தலையிட்டு அந்த நபரை தடுத்து தாக்கி அடக்கினார். இந்த சம்பவத்தின் போது, அந்த திருடன் தடுத்த பயணியையே கத்தியால் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் இந்த சம்பவத்தை பார்த்துக்கொண்டிருந்தனர். பின்னர் அந்த திருடன் மற்ற பயணிகளால் அடக்கப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் மீது எவ்வகையான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன என்பது குறித்து தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
