இன்று தமிழகத்தில் இந்த பகுதிகளில் பேருந்துகள் ஓடாது.. வெளியான பரபரப்பு அறிவிப்பு!
மதுரையில் பேருந்து ஓட்டுநரை, பேருந்து நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து செருப்பால் தாக்கிய விவகாரத்தில், மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட நிலையில், தாராபுரத்தில் அரசு போக்குவரத்து கழகம் முன்பு போக்குவரத்து ஊழியர்கள் மற்றும் சங்கத்தினர் மாரிமுத்து உட்பட நான்கு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் பாரிமுத்து தாராபுரம் போக்குவரத்து தொழிலாளர்கள் முன்னிலையில் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.

நிலைய உதவி மேலாளர் மாரிமுத்து மீது மட்டும் நடவடிக்கை எடுத்து, உதவியாக இருந்த பிற அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் இன்று ஜூன் 10ம் தேதி காலை 6 மணி முதல் கோவைக்கோட்டை தாராபுரம் கிளையை சேர்ந்த 81 அரசு பேருந்துகளும் இயங்காது என போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதனால் இன்று காலை 6 மணிக்கு பேருந்துகள் இயங்காததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது
