புறாக்களுக்கு உணவு கொடுத்த தொழிலதிபருக்கு ரூ5000 அபராதம்!

 
புறா
 

மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன. பூங்காக்கள், சுற்றுலா தலங்களில் குவியும் புறாக்களுக்கு மக்கள் வழக்கமாக தானியங்களை வழங்கி வந்தனர். ஆனால் இதனால், அருகில் வசிப்போருக்கு நுரையீரலை பாதிக்கும் ‘ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா’ தொற்று அதிகரிப்பதாக புகார்கள் எழுந்தன.

புறா

இதையடுத்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மும்பை உயர்நீதிமன்றம், புறாக்களுக்கு உணவு வழங்க தடை விதித்தது. தடையை மீறுபவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவை மீறி தாதரில் புறாக்களுக்கு தானியம் வழங்கிய தொழிலதிபர் நிதின் சேத் கைது செய்யப்பட்டார்.

 புறா முட்டை எடுக்க கிணற்றில் இறங்கிய இளைஞர் நீரில் மூழ்கி பலி

உயிருக்கு ஆபத்தான தொற்றுநோய் பரவ காரணமான அலட்சிய செயல் என போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிதின் சேத்துக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தது. மனித ஆரோக்கியம் முக்கியம் என்பதையே இந்த தீர்ப்பு மீண்டும் நினைவூட்டியுள்ளது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!