இப்பவே வாங்கிடுங்க... தங்கம் விலை அதிரடி சரிவு... சவரனுக்கு ரூ.640 குறைவு.. வெள்ளி கிலோ ரூ.4,000 குறைவு!
ஒவ்வொரு நாளும் புதிய வரலாறு படைத்து வரும் தங்கம் விலை, இன்று (டிசம்பர் 29) சற்று சரிவைக் கண்டுள்ளது. கடந்த டிசம்பர் 15-ம் தேதி ஒரு சவரன் ஒரு லட்சத்தைத் தாண்டிய நிலையில், இன்றைய விலை வீழ்ச்சி நகை வாங்குவோருக்கு ஓரளவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று ஒரு சவரன் ரூ.1,04,800-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று காலை அதன் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது: சவரனுக்கு ரூ.640 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,04,160-க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.13,020-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் இன்று கணிசமாகக் குறைந்துள்ளது: கிராமுக்கு ரூ.4 குறைந்து, ஒரு கிராம் ரூ.281-க்கு விற்பனையாகிறது. கிலோவுக்கு ரூ.4,000 சரிந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,81,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரே ஆண்டில் ஒரு சவரன் தங்கம் சுமார் 50 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்திருப்பது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேசச் சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள், டாலரின் மதிப்பு மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் போன்றவை தங்கம் விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

இருப்பினும் இன்று ஏற்பட்டுள்ள இந்தச் சிறு விலை குறைவு, நகை வாங்கக் காத்திருப்பவர்களுக்கு ஒரு நற்செய்தியாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் சர்வதேசச் சந்தை நிலவரத்தைப் பொறுத்தே விலை மேலும் குறையுமா அல்லது மீண்டும் உச்சத்தைத் தொடுமா என்பது தெரியவரும்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
