பைபாஸ் சர்ஜரி.. திடீர் நெஞ்சுவலி.. ஈவிகேஎஸ் இளங்கோவன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

 
இளங்கோவன்

நேற்று, திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன். அவர் மருத்துவமனையின் திவீர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் காங்கிரஸ் தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

சமீபத்தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்று எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈவிகேஎஸ் இளாங்கோவன், நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அவர் தற்போது நலமாக இருப்பதாக அவரது உதவியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இளங்கோவன்

இதற்கு முன்பு, ஏற்கெனவே ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டிருப்பதால், அவரது இந்த திடீர் உடலநலக் குறைவு காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்திருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன்,  கடந்த 1984ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதன் பின்னர் அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடவில்லை. எம்பி பதவிக்கு மட்டுமே போட்டியிட்டுள்ளார்.

இளங்கோவன்

ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளங்கோவனின் மகன் திருமகன் மாரடைப்பு காரணமாக காலமானதும், அந்த தொகுதியில் நடைப்பெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு, அதிக வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவன் வெற்றி பெற்றிருந்தார். இம்மாதம் 10ம் தேதி தான் எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

2023 இந்த 6 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்! பயன்படுத்திக்கோங்க

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web