‘ஓய்வூதியத் திட்டத்திற்கு’ அமைச்சரவையில் ஒப்புதல் - பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு!

 
அமைச்சரவை கூட்டம்

தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு ஊழியர்களின் நீண்டகால கோரிக்கையான ஓய்வூதியப் பலன்கள் குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் (CPS) உள்ள குறைபாடுகளைப் போக்க, முதலமைச்சர் அண்மையில் இந்த புதிய திட்டத்தை அறிவித்திருந்தார். இதன் மூலம் அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போது, அவர்கள் கடைசியாகப் பெற்ற ஊதியத்தில் 50 சதவீதத்தை ஓய்வூதியமாகப் பெறுவது உறுதி செய்யப்படும்.

இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதல் இன்று வழங்கப்பட்டது. வரும் 20-ஆம் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத்தொடரில் இதற்கான அறிவிப்புகள் முறையாக இடம்பெறும்.

தமிழக அரசு ஊழியர்கள்

வரும் ஜனவரி 20-ஆம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் சட்டசபை கூடுகிறது. இந்த ஆண்டு தாக்கல் செய்யப்படவுள்ள இடைக்கால பட்ஜெட்டில் (Interim Budget), இந்த ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்தத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது குறித்து அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வரும் தூய்மைப் பணியாளர்களின் நலன் மற்றும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. தமிழகத்திற்குப் புதிய முதலீடுகளை ஈர்க்கும் வகையில் தொழில் கொள்கைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

அரசின் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் புகார்களுக்குத் தகுந்த தரவுகளுடன் சட்டசபையில் பதிலளிக்க அமைச்சர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.  அரசு ஊழியர்கள் மத்தியில் இது குறித்துப் பெரிய விவாதமே நடந்து வருகிறது.

அரசு ஊழியர்கள்

அதனை எளிமையாகப் புரிந்துகொள்ளம் ஊழியர்கள் பங்களிப்புத் தொகை செலுத்தத் தேவையில்லை. முழு ஓய்வூதியத்தையும் அரசே வழங்கும். (அரசு ஊழியர்களின் கோரிக்கை இதுதான்). ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதி பிடிக்கப்பட்டு சந்தை நிலவரப்படி ஓய்வூதியம் வழங்கப்படும். இதில் நிலையான தொகைக்கு உத்தரவாதம் இல்லை.

இது தமிழக அரசு கொண்டு வரும் இடைப்பட்ட வழி. இதில் ஊழியர்களின் பங்களிப்பு இருந்தாலும், ஓய்வூதியத் தொகையில் 50% கிடைக்கும் என்ற உத்தரவாதத்தை அரசே வழங்குகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!