தமிழறிஞர் கால்டுவெல் 211வது பிறந்தநாள் விழா... தமிழக அரசின் சார்பில் ஆட்சியர் மரியாதை!

 
கால்டுவெல் 211வது பிறந்தநாள் விழா
திருநெல்வேலியில் தமிழறிஞர் கால்டுவெல் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், அன்னாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை வட்டம், இடையன்குடியில் உள்ள தமிழறிஞர் பேராயர் இராபர்ட் கால்டுவெலின் 211-வது பிறந்தநாளை முன்னிட்டு அன்னாரின் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார், திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் செ.ராபர்ட் புரூஸ், மாவட்ட ஊராட்சித் தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் ஆகியோர் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு அரசு தமிழறிஞர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் ஆகியோரை சிறப்பிக்கும் வகையில் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாள்களில் அவரது நினைவு இல்லங்களில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று திராவிட மொழியை ஒப்பிலக்கணம் ஆய்வு செய்த தமிழறிஞர் கால்டுவெல் அவர்களது பிறந்தநாள் விழா திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

1814-ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் தேதி அயர்லாந்து நாட்டில் பேராயர் இராபர்ட் கால்டுவெல் பிறந்தார். அவர் நான்கு மாத கடல்வழி பயணத்தில் தெலுங்கும், சமஸ்கிருதமும் கற்று,1839ஆம் ஆண்டு ஜனவரி 8ம் நாள் சென்னை வந்து சேர்ந்தார். தமிழுக்கு தொண்டாற்றி ஒப்பிலக்கணம் தந்த கால்டுவெல் ‘Probagation of the Gospel’’ என்ற நற்செய்தி பரப்பு சங்கம் சார்பாக வாட்டும் வெயிலிலும், நூற்றுக்கனக்கான மையல்களை கால்நடையாகவே கடந்து 1841ல் இடையன்குடி வந்து சேர்ந்தார். 

1856ல் A Comparative Grammar of the dravidian of south indian family of language எனப்படும் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலினை இயற்றினார். கிளாஸ்கோ பல்கலைகழகத்தில் மூன்று ஆண்டுகள் இளங்களை பட்டமும், தத்துவம், இலத்தின் மற்றும் எபிரேயம் ஆகிய மொழிகளில் சிறப்பு தேர்ச்சியும் பெற்றார். கிரேக்க மொழி கற்பித்த போராசிரியர் சர்.டேனியல் சான்பார்ட் அவர்களால் மொழி ஆராய்ச்சில் மிகுந்த ஆர்வம் பெற்றார். 1877ம் ஆண்டு கல்கத்தாவில் பேராயராக அருட்பொழிவு பெற்றார். 1881ல் நெல்லை மாவட்ட வரலாற்றை எழுதினார். 

இவையாவும் பேராயர் கால்டுவெல் அவர்களின் ஆற்றலுக்கும், பெருமைக்கும், அழியாத சின்னங்களாக திகழ்கின்றது. 1891ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் நாள் பேராயர் கால்டுவெல் கொடைக்கானலில் மரணம் அடைந்தார். அவரது உடல் இடையன்குடிக்கு கொண்டு வரப்பட்டு அவரால் கட்டப்பட்ட சர்ச் வழிபாட்டு இல்லத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

கால்டுவெல் சமஸ்கிருதம் மொழியிலிருந்துதான் தமிழ் பிறந்ததது என்ற மாயயை மாற்றி சமஸ்கிருதம் மொழிக்கு முன்னால் தோன்றியது தமிழ் மொழி என்றும், தமிழ்மொழி தனிக்குடும்பம் என்றும், திராவிட மொழிகள் என்றும் சொன்னார்கள். திராவிடம் என்ற சொல்லை முதன்முதலாக உலகிற்கு தந்தவர் மேலும் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்தைப் பெறுவதற்கு துணையாக இருந்தவர் அவர்களுக்கு பெருமை சேர்கும்வகையில் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி தபால் தலையினை வெளியிட்டார்கள். 2011 ஆம் ஆண்டு இடையன்குடியில் அவர் வாழ்ந்த இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்தார்கள். அதனைத் தொடர்ந்து பேராயர் இராபர்ட் கால்டுவெல் அவர்களின் பிறந்த நாளன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

தமிழ்நாடு அரசால் ரூ.1.03 கோடி மதிப்பீட்டில் தொன்மையான இராபர்ட் கால்டுவெல் நினைவு இல்லம் பழமை மாறாமல் புனரமைப்பு செய்ய சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?