அமலுக்கு வந்தது... நாடு முழுவதும் சிகரெட், புகையிலை விலையேற்றம்!
Feb 1, 2026, 09:20 IST
இன்று முதல் நாடு முழுவதும் சிகரெட், ஹூக்கா, பைப் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு கூடுதல் கலால் வரி விதிக்கப்படுவதாக சட்டத்துறை திருத்தம் “கலால் திருத்த மசோதா 2025” நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதால், விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.

இதன்படி, 1,000 சிகரெட்டுகளுக்கு ரூ.2,050 முதல் ரூ.8,500 வரை கூடுதல் வரி விதிக்கப்படுகிறது. மெல்லும் புகையிலை பொருட்களுக்கு வரி 25% இருந்து 100% ஆக, ஹூக்கா 25% இருந்து 40% ஆக, பைப் சிகரெட் கலவைகள் 60% இருந்து 325% ஆக உயர்கிறது.

இந்த உயர்வு காரணமாக இன்று முதல் புகையிலை விலை பல மடங்காக உயர்ந்துள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
