அமலுக்கு வந்தது... நாடு முழுவதும் இன்று முதல் ரயில் கட்டணம் உயர்வு!

 
ரயில் கூட்டம்

சென்னை: இந்திய ரயில்வேயின் பராமரிப்புச் செலவுகள் மற்றும் பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் இன்று (டிசம்பர் 26, 2025) முதல் ரயில் பயணக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பு நடுத்தர மற்றும் ஏழை எளிய மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில்வே துறையின் புதிய அறிவிப்பின்படி, எக்ஸ்பிரஸ் மற்றும் மெயில் ரயில்களில் 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் பயணிகளுக்குக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. குளிர்சாதன (AC) வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் குளிர்சாதன வசதி இல்லாத (Sleeper) முன்பதிவு பெட்டிகளுக்கு கிலோ மீட்டருக்கு 2 காசுகள் வீதம் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பதிவில்லாத (General) சாதாரண பெட்டிகளுக்கு 215 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்யும் போது, ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 1 காசு வீதம் கட்டணம் உயர்கிறது.

 எக்ஸ்பிரஸ் ரயில்

இந்தக் கட்டண உயர்வு சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமன்றி, இந்திய ரயில்வேயின் பிரீமியம் ரயில்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது: வந்தே பாரத் (Vande Bharat), ராஜ்தானி (Rajdhani), சதாப்தி (Shatabdi), தேஜஸ் (Tejas), அம்ரித் பாரத் மற்றும் அந்தியோதியா ரயில்கள், வந்தே மெட்ரோ ரயில்கள்

ரயில்வே நிர்வாகத்தின் தெளிவுபடுத்தலின்படி நேற்று டிசம்பர் 25-ம் தேதி வரை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தப் புதிய கட்டண உயர்வு பொருந்தாது. இன்று (டிசம்பர் 26) முதல் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே புதிய உயர்த்தப்பட்ட கட்டணம் வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட்

ஏற்கனவே அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், ரயில் கட்டண உயர்வு எளிய மக்களின் பயணத் திட்டங்களில் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் எனப் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாகத் தொலைதூரப் பயணம் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் இதனால் நேரடியாகப் பாதிக்கப்படுவார்கள்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!