அமலுக்கு வந்தது... சீனா மீது 104% வரி விதித்தது அமெரிக்கா... 24 மணி நேர கெடு முடிந்ததால் பரபரப்பு!

அமெரிக்கப் பொருட்களின் மீது சீனா, 34 சதவீத வரி விதித்திருந்த நிலையில், இந்த 34 சதவீத வரியைத் திரும்பப் பெற சீனாவுக்கு விதித்த 24 மணி நேர கெடு முடிந்த நிலையில், சீனா மீது 104% வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, சீனா தனது 34% வரி அதிகரிப்பை திரும்பப் பெறவில்லை என்றால்,இன்று ஏப்ரல் 9ம் தேதி முதல் சீனா மீது 50% கூடுதல் வரிகளை அமெரிக்கா விதிக்கும். கூடுதலாக சீனாவுடனான அனைத்து பேச்சுவார்த்தைகளும் நிறுத்தப்படும். பிற நாடுகளுடனான பேச்சுவார்த்தைகள் உடனடியாக நடைபெறும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் 24 மணி நேர கெடு முடிந்தும் அமெரிக்கா மீதான 34 சதவீத வரிவிதிப்பை சீனா திரும்ப பெறவில்லை. இதனையடுத்து சீனா மீது 104 சதவீத வரி விதிக்கப்படுவதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இந்த வரிவிதிப்பு இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!