வெளிநாட்டில் தடம் பதிக்கும் கேம்பா கூல்ட்ரிங்க்ஸ்.. புதிய வர்த்தகத்தை தொடங்கிய அம்பானி குழுமம்!

 
காம்பா

இந்தியாவில் பெப்சி மற்றும் கோகோ கோலா போன்ற அமெரிக்க பன்னாட்டு நிறுவனங்கள் குளிர்பான சந்தையில் ஆதிக்கம் செலுத்தும் அதே வேளையில், குறைந்த விலையில் தயாரிக்கப்படும் உள்ளூர் தயாரிப்புகளும் அவற்றுடன் போட்டியிடுகின்றன. இந்த சூழ்நிலையில், இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியும் குளிர்பான வணிகத்தை மேற்கொள்கிறார். 1970கள்-80களில் இந்திய குளிர்பான சந்தையில் முன்னணியில் இருந்த குஜராத்தைச் சேர்ந்த கேம்பா கோலா, கோகோ கோலா மற்றும் பெப்சி போன்ற வெளிநாட்டு நிறுவனங்களால் சந்தை மதிப்பை இழக்கத் தொடங்கியது. வணிகத்தில் தொடர்ந்து இழப்புகளைச் சந்தித்ததால், அதன் ஆலைகளும் மூடப்பட்டன.

அம்பானி

இந்த சூழ்நிலையில்தான் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் அதை வாங்கி சந்தைப்படுத்துகிறது. அதன்படி, கேம்பா கோலா, கேம்பா ஆரஞ்சு மற்றும் கேம்பா எலுமிச்சை என மூன்று வகையான குளிர்பானங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இது சந்தையில் 200 மில்லி, 500 மில்லி, 600 மில்லி, 1 லிட்டர் மற்றும் 2 லிட்டர் அளவுகளில் முறையே 10, 20, 30, 40 மற்றும் 80 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆரம்பத்தில் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் விற்கப்பட்ட இந்த வகை குளிர்பானம், தற்போது நாடு முழுவதும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்காக விளையாடிய முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் நிறுவனமும் இந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், ரிலையன்ஸ் தனது கேம்பா குளிர்பானத்தை முதன்முறையாக இந்தியாவிற்கு வெளியே விற்பனை செய்யத் தொடங்கியுள்ளது. அபுதாபியை தளமாகக் கொண்ட அக்டியா நிறுவனத்துடன் இணைந்து கேம்பா பானங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் விற்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது. தீவிர சந்தைப்படுத்தல் மூலம் கோகோ கோலா மற்றும் பெப்சிக்கு கடுமையான சவாலை ஏற்படுத்திய பின்னர், தற்போது இந்தியாவிற்கு வெளியே கால் பதித்துள்ள கேம்பா , எமிரேட்ஸுக்குப் பிறகு பிற மேற்கு ஆசிய நாடுகளுக்கும் பின்னர் ஆப்பிரிக்காவிற்கும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

 உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web