அமாவாசை தினத்தில் புது காரியங்களைத் துவங்கலாமா?! என்னென்ன செய்யக் கூடாது?!

அமாவாசை தினத்தைப் பற்றிய தவறான புரிதல்கள் பலருக்கும் இப்போதும் இருந்து வருகிறது. அமாவாசை திதி என்பது பொதுவாக முன்னோர்களின் வழிபாட்டுக்குரிய நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
நமது இந்து புராணங்களை பொறுத்தவரை ஒவ்வொரு அமாவாசை திதியன்றும் நம் முன்னோர்கள் புண்ணிய லோகத்தில் இருந்து பூமிக்கு நம்மைக் காண வருகிறார்கள் என்பது ஐதிகம்.
இதை அறிவியல் ரீதியாக சொல்வதாக இருந்தால் சந்திரனும் சூரியனும் நேருக்கு நேராக சந்திப்பதால் அமாவாசை தினத்தன்று ஒரு விதமான காந்த சக்தி பூமியில் ஏற்படுகிறது. இதே போல தான் பெளர்ணமி திதியன்றும் ஏற்படுகிறது.
இதனால் தான் அமாவாசை தினத்தன்றும், பெளர்ணமி நாளிலும் கடலில் அலைகள் பெரிது பெரிதாக பொங்கி எழுகின்றன. இந்த காந்த அலைகள் செரிமானத்தை மந்தமாக்கும் என்கிற காரணத்தால் தான் அறிவியல் ரீதியாகவும் அமாவாசை தினத்தில் நம்மை அசைவ உணவுகளைத் தவிர்த்து விட கூறினார்கள். அதனால் தர்ப்பணம் தராதவர்களும் கூட அன்றைய தினத்தில் அசைவ உணவுகளை தவிர்த்து விடுவது உத்தமம்.
அமாவாசை தினத்தன்று பூமிக்கு வரும் முன்னோர்கள், தங்களது வாரிசுகளைப் பார்த்து ஆசிர்வதிக்கவும் செய்கிறார்கள். இந்த நம்பிக்கையை மனதில் வைத்து அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களையும், பிதுர் தேவதைகளையும் வழிபட்டு புதிய காரியங்களை தொடங்கினால் நிச்சயம் நல்லதே நடக்கும் என்பது ஆன்மிக அன்பர்களின் வாக்கு.
எனினும் திருமணம் போன்ற சுப காரியங்களை அமாவாசை தினத்தில் தவிர்த்து விடுகிறோம். அன்றைய நாள், நட்சத்திர யோக பலன்களைக் கொண்டு தவிர்ப்பதா, வேண்டாமா என்று தீர்மானித்துக் கொள்ளுங்க.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!