பொருளாதார பலம் மற்ற நாடுகளை மிரட்டும் ஆயுதமாக மாறியுள்ளது... கனடா பிரதமர் அமெரிக்காவை கடும் சாடல்!

 
kanada america

உலக பொருளாதார மன்றம் டாவோஸில் நடைபெற்ற நிலையில், கனடா பிரதமர் மார்க் கார்னி அமெரிக்காவை கடுமையாக விமர்சித்தார். உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் வல்லரசு நாடுகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவதாகவும், இது சிறிய மற்றும் நடுத்தர நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறி வருவதாகவும் அவர் கூறினார். அவரது இந்த பேச்சு சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

“பொருளாதார பலம் இன்று மற்ற நாடுகளை மிரட்டும் ஆயுதமாக மாறியுள்ளது. இது ஆபத்தான புதிய யதார்த்தம்” என கார்னி தெரிவித்தார். உணவு, எரிசக்தி மற்றும் பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளில் சுயசார்பு இல்லாத நாடுகள், பிற நாடுகளின் தயவில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் எச்சரித்தார். இது உலக அமைதி மற்றும் சமநிலையை பாதிக்கும் என்றும் கூறினார்.

மேலும், பழைய கூட்டணிகளும் பாதுகாப்பு ஒப்பந்தங்களும் இனி போதாது என்றும் கார்னி சுட்டிக்காட்டினார். வல்லரசு நாடுகளின் அழுத்தங்களுக்கு அடிபணியாமல் இருக்க, நடுத்தர சக்தி நாடுகள் ஒன்றிணைந்து புதிய பாதையை உருவாக்க வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார். இந்த உரை அமெரிக்காவின் அரசியல் மற்றும் பொருளாதார ஆதிக்கத்திற்கு நேரடியான சவாலாக பார்க்கப்படுகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!