8 வாரங்களுக்கு மட்டுமே இருப்பு... இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு!
மேற்கு ஆசியாவில் அதிகரித்து வரும் மோதல் காரணமாக இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியாவும் கனடாவும் முன்வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது இந்தியா வெளிநாடுகளிலிருந்து தினமும் சுமார் 195 மில்லியன் மெட்ரிக் நிலையான கன மீட்டர் அளவிலான எரிவாயுவை இறக்குமதி செய்து வருகிறது. அதில் பெரும்பகுதி கத்தார் நாட்டிலிருந்து கிடைக்கிறது. அந்த நாட்டிலிருந்து மட்டும் சுமார் 60 மில்லியன் அளவிலான எரிவாயு இந்தியாவுக்கு வருகிறது.

இந்நிலையில் மேற்கு ஆசியாவில் மோதல் அதிகரித்து வருவதால் மாற்று எரிசக்தி ஆதாரங்களை இந்தியா ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சர்வதேச எரிசக்தி நிறுவனம் மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்புகளுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. எரிவாயு மற்றும் எண்ணெய் போக்குவரத்து தடையின்றி நடைபெற தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் எரிசக்தி பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்களுக்கு காப்பீடு பெற அமெரிக்காவுடனும் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் எட்டு வாரங்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய இருப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
