இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ங்க... வணிகர்கள் கடையடைப்பு போராட்டம்!

 
கடையடைப்பு

தமிழகத்தில் பல பகுதிகளில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. கோடையை சமாளிக்க பலரும் மலை வாசஸ்தலங்களுக்கு செல்ல இப்போதே திட்டமிட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு ஊட்டி, கொடைக்கானல் செல்ல இபாஸ் முறையை நடைமுறைப்படுத்தியுள்ளது. இதனை எதிர்த்து நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

உதகை நீலகிரி


சுற்றுலா பயணிகள் வாகனம் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவே இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை  ஏப்ரல் 1ம் தேதி  நேற்று முதல் இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே இன்று முதல் கொடைக்கானல் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டு வருகிறது.  

நீலகிரி

பணி நாட்களில் 4000 வாகனங்களும் விடுமுறை நாட்களில் 6000 வாகனங்களும்  அனுமதிக்கப்படும் என அறிவித்திருந்தார். இதனையடுத்து திண்டுக்கல் - தேனி எல்லை பகுதியான கெங்குவார்பட்டி சோதனை சாவடியில் இ-பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன.  நீலகிரி மாவட்டத்திலும் இ-பாஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. 
இந்நிலையில், இ-பாஸ் நடைமுறையை முழுவதுமாக ரத்து செய்ய வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் வணிகர்கள் இன்று ஒருநாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் இந்த போராட்டத்தில் மாவட்டம் முழுவதும் சுமார் 20,000 கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web