இந்தியாவிலேயே தமிழகம் புற்றுநோயாளிகள் எண்ணிக்கையில் முதலிடம்... மத்திய அரசு அதிர்ச்சி ரிப்போர்ட்!

 
கேன்சர்
 

சமீபகாலமாக இந்தியாவில் புற்றுநோய் பாதிப்பு அதிகமாகி வருகிறது. மகாராஷ்டிரா, உ.பி., மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அடுத்து இப்போது தமிழ்நாடும் முன்னுக்கு வந்துள்ளது. அதிக எண்ணிக்கையிலான புற்றுநோயாளிகள் பதிவான மாநிலங்களில் ஒன்றாகத் தமிழ்நாடு உள்ளது. இது குறித்த தகவல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் மக்களவையில் வெளியிட்டது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) தகவல்கள் இதை உறுதிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 98,386 புதிய புற்றுநோய் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இந்திய அளவில் இந்த ஆண்டு 15 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டில் 93,536 பேரும், 2023 ஆம் ஆண்டில் 95,944 பேரும் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், புகையிலை, மதுப் பழக்கம், போதிய உடல் இயக்கம் இல்லாதது போன்ற காரணங்களால் நோய் பரவுவதாக ICMR சொல்கிறது.

புற்றுநோய் தடுப்பு மற்றும் சிகிச்சையை வலுப்படுத்த மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேசிய தொற்றுநோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு உதவி வழங்கப்படுகிறது. மாநில புற்றுநோய் நிறுவனங்கள் மற்றும் சிகிச்சை மையங்கள் அமைக்க மத்திய அரசு உதவுகிறது. மேலும், 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு நாடு முழுவதும் புற்றுநோய் ஸ்கிரீனிங் (பரிசோதனை) செய்யும் பிரசாரத்தையும் சுகாதார அமைச்சகம் தீவிரமாகச் செய்து வருகிறது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!