தலை, கழுத்து புற்றுநோயை 10 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிய புதிய முறை!
அமெரிக்காவில் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களில் 70 சதவிகிதம் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (HPV) காரணமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோய் ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கருப்பை வாய்ப் புற்றுநோய் போல இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் வழிமுறை இதுவரை இல்லை. இதனால் நோய் தீவிரமாக வளர்ந்த பிறகே கண்டுபிடிக்கப்படுகிறது.

தற்போது நாவல் லிக்விட் பயாப்சி டூல் மற்றும் HPV-DeepSeek என்ற புதிய முறைகள் மூலம் இந்த புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிய முடியும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் கட்டிகள் இரத்தத்தில் வெளியிடும் HPV DNA துகள்களை முழு மரபணு பரிசோதனை மூலம் இந்த முறை கண்டறிகிறது. இது தற்போதுள்ள பரிசோதனை முறைகளை விட சிறப்பாக செயல்படுகிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

56 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 28 பேருக்கு புற்றுநோய் வரக்கூடிய சாத்தியம் முன்கூட்டியே கண்டறியப்பட்டது. அதில் 22 பேருக்கு புற்றுநோய் துகள்கள் இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுபோன்ற பரிசோதனைகளை மேற்கொண்டால் தலை மற்றும் கழுத்து புற்றுநோயிலிருந்து முன்கூட்டியே தற்காத்துக்கொள்ள முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
