பகீர்... 5 முதல் 19 வயதுக்குட்பட்ட சிறுவர்களை காவு வாங்கும் புற்றுநோய்... லான்செட் அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை!
இந்தியாவின் எதிர்காலத் தூண்களாகக் கருதப்படும் சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை, இப்போது கொடிய புற்றுநோய் குறிவைக்கத் தொடங்கியுள்ளது. 'தி லான்செட்' என்கிற சர்வதேச மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள 2023-ம் ஆண்டின் ஆய்வு முடிவுகள், இந்தியப் பெற்றோர் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளன. 5 முதல் 19 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் உயிரிழப்புக்கான முதல் 10 முக்கியக் காரணங்களில் ஒன்றாகப் புற்றுநோய் இடம்பிடித்திருப்பது, மருத்துவ உலகையே அதிர வைத்துள்ளது.

குறிப்பாக, இந்தியச் சிறுவர்களிடையே ரத்தப் புற்றுநோய், மூளைக்கட்டிகள் மற்றும் நிணநீர் சுரப்பி புற்றுநோய் ஆகியவைதான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துவதாக அந்த ஆய்வு கூறுகிறது. "விளையாடித் திரிய வேண்டிய வயதில், மருத்துவமனை வார்டுகளில் சிகிச்சைக்குக் காத்திருப்பது கொடுமையிலும் கொடுமை" என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த நோய்கள் குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதும், ஆரம்பக்கட்டத்திலேயே கண்டறியத் தவறுவதும்தான் உயிரிழப்புகள் அதிகரிக்க முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

நவீன வாழ்க்கை முறை மாற்றங்களா அல்லது சுற்றுச்சூழல் மாசுபாடா எது இந்தக் கொடூர நோய்க்கு அடிதளமிடுகிறது என்பதை அரசு தீவிரமாக ஆராய வேண்டும். வெறும் புள்ளிவிவரங்களாகப் பார்க்காமல், ஒவ்வொரு பிஞ்சு உயிரையும் காக்கத் தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். இல்லையெனில், ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவது என்பது வெறும் காகிதக் கனவாகவே முடிந்துவிடும் அபாயம் உள்ளது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
