தவெகவில் இன்று முதல் வேட்பாளர்கள் அறிமுகம்? - பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்பு!
2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வரும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), குறிப்பிட்ட சில தொகுதிகளுக்கானத் தங்கள் வேட்பாளர்களை இன்று (டிசம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை) முதல் தொகுதி நிர்வாகிகளிடம் மட்டும் அறிமுகம் செய்யத் தொடங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்பே, தவெக சார்பில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்முகத் தேர்வுகள் நடத்தப்பட்டன. அதன் அடிப்படையில், கட்சித் தலைமை ஏற்கனவே ஒரு தற்காலிக வேட்பாளர் பட்டியலைத் தயாரித்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், கட்சியின் தலைவர் விஜய் சில முக்கியத் தொகுதிகளுக்கு மட்டும் நிர்வாகிகளைத் தயார் செய்யும் விதமாக, வேட்பாளர்களை அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த வேட்பாளர் அறிமுக நிகழ்வின் தொடக்கமானது இன்று நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று நடைபெறும் நிகழ்ச்சி: இன்று நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், கொள்கைப் பரப்புப் பொதுச் செயலாளர் அருண்ராஜ் ஆகியோர் இதில் பங்கேற்கின்றனர்.

நாமக்கலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில்தான் இன்று சில தொகுதிகளுக்கானத் தற்காலிக வேட்பாளர்கள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவெகவின் தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தும் முதற்கட்ட நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
