12வது முடித்தவர்களுக்கு ராணுவத்தில் சேர வாய்ப்பு... டிசம்பர் 30 கடைசி தேதி.. முழு விபரம்!

 
ராணுவம்

இந்திய நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் பெருமைமிக்க ராணுவப் பணியில் சேரத் துடிக்கும் இளைஞர்களுக்கு ஒரு பொற்கால வாய்ப்பு தேடி வந்துள்ளது. மத்திய அரசின் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (UPSC) மூலம் தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கடற்படை அகாடமியில் (NA) காலியாக உள்ள 394 பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்பில் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பும் இளைய தலைமுறைக்கு இது ஒரு மிகச்சிறந்த நுழைவு வாயிலாகும்.

இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 12-ஆம் வகுப்பு (Plus Two) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக, விமானப்படை மற்றும் கடற்படைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 12-ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணித பாடங்களைப் பயின்றிருப்பது அவசியமாகும். விண்ணப்பதாரர்களின் வயது வரம்பைப் பொறுத்தவரை, 18 முதல் 21 வயதிற்கு உட்பட்ட திருமணமாகாத இளைஞர்கள் (ஆண்/பெண் இருபாலரும்) இதற்கு விண்ணப்பிக்கலாம்.

ராணுவம் எல்லை

விண்ணப்பதாரர்கள் இரண்டு கட்டங்களாகத் தேர்வு செய்யப்படுவார்கள். முதற்கட்டமாக UPSC நடத்தும் எழுத்துத் தேர்வு நடைபெறும். இதில் கணிதம் மற்றும் பொது அறிவுத் திறனில் இருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு அடுத்ததாக 'சர்வீஸ் செலக்ஷன் போர்டு' (SSB) மூலம் அறிவுத்திறன் சோதனை, உடற்தகுதி தேர்வு மற்றும் ஆளுமைத் திறன் நேர்காணல் ஆகியவை நடத்தப்படும். இவற்றுடன் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு இறுதிப் பட்டியல் தயார் செய்யப்படும்.

பயிற்சிக் காலத்தின் போதே மாணவர்களுக்குக் குறிப்பிட்ட உதவித்தொகை (Stipend) வழங்கப்படும். பயிற்சிக் காலம் முடிந்து அதிகாரியாக நியமிக்கப்படும்போது, மத்திய அரசின் விதிமுறைப்படி மிகச்சிறந்த ஊதியம் மற்றும் இதர சலுகைகள் வழங்கப்படும். சமூக அந்தஸ்து, கைநிறையச் சம்பளம் மற்றும் தேச சேவை என அனைத்தையும் ஒருசேரப் பெற விரும்புவோருக்கு இது ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.

ராணுவம்

தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் upsc.gov.in அல்லது upsconline.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கக் கடைசி நாள் டிசம்பர் 30, 2025 ஆகும். கடைசி நேர இணையதள நெரிசலைத் தவிர்க்க, விருப்பமுள்ளவர்கள் இப்போதே விண்ணப்பிப்பது நல்லது.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!