தமிழகத்தில் அதிகரிக்கும் கஞ்சா போதை... ரயிலில் வாலிபருக்கு அரிவாள் வெட்டு... 4 சிறுவர்கள் கைது!

 
ரீல்ஸ்

மின்சார ரயிலில் பயணம் செய்த வடமாநில வாலிபரை கத்தியைக் காட்டி மிரட்டி 'ரீல்ஸ்' வீடியோ எடுத்ததோடு, அவரை ரயில் நிலையத்திற்கு வெளியே கடத்திச் சென்று ரத்தம் சொட்டச் சொட்ட அரிவாளால் வெட்டிய 17 வயது சிறுவர்கள் 4 பேரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் கோலாப்பூர் பகுதியைச் சேர்ந்த 34 வயதான சுராஜ் என்பவர் சென்னையில் கூலி வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தார். ரயில் திருவாலங்காடு நிலையத்தை அடைந்தபோது, கஞ்சா போதையில் இருந்த 17 வயதுடைய 4 சிறுவர்கள் ரயிலில் ஏறியுள்ளனர். அவர்கள் சுராஜை குறிவைத்து, கத்தியைக் காட்டி மிரட்டத் தொடங்கினர். ஒரு சிறுவன் சுராஜின் கழுத்தில் கத்தியை வைத்து வெட்டுவது போல மிரட்ட, மற்றொரு சிறுவன் அதனைத் தனது செல்போனில் 'ரீல்ஸ்' வீடியோவாகப் பதிவு செய்துள்ளான். இதனைத் தடுக்க முயன்ற சுராஜை அந்த சிறுவர்கள் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

மின்சார ரயில்

சிறுவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த சுராஜ், திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கி வேகமாக நடந்து சென்றுள்ளார். ஆனால், விடாமல் பின்தொடர்ந்த அந்தப் போதை சிறுவர்கள், சுராஜை மிரட்டி ரயில் நிலையத்தின் மதில் சுவருக்கு வெளிப்புறத்தில் உள்ள ஒரு மறைவான இடத்திற்குக் கடத்திச் சென்றனர். அங்கு வைத்து 3 சிறுவர்கள் கத்தி மற்றும் அரிவாளால் சுராஜைத் தலை, கை, கால் என உடல் முழுவதும் கொடூரமாக வெட்டியுள்ளனர். அப்போதும் மற்றொரு சிறுவன் இந்த வன்முறையை வீடியோ எடுத்துள்ளான். "என்னை விட்டுவிடுங்கள்" எனச் சுராஜ் ரத்தம் சொட்டச் சொட்ட மன்றாடியும், போதையில் இருந்த அந்தச் சிறுவர்கள் அவரைச் சிதைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

போலீசார் காவல் ஜீப் விசாரணை கொலை கைது பாலியல் பலாத்காரம் நீட்டிப்பு தப்பியோட்டம் கைதி

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுராஜை கண்ட பயணிகள், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவரை மீட்டு முதலில் திருத்தணி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் திருவள்ளூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதித்தனர்.

இந்நிலையில் சிறுவர்கள் ரயிலில் வைத்து சுராஜை மிரட்டிய 'ரீல்ஸ்' வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அந்த வீடியோ ஆதாரத்தைக் கொண்டு திருத்தணி போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் திருவாலங்காடு மற்றும் அரக்கோணம் பகுதிகளைச் சேர்ந்த நந்தகோபால் (17), சந்தோஷ் (17), விக்கி (17) மற்றும் நெமிலியைச் சேர்ந்த சந்தோஷ் (17) ஆகிய 4 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!