தூத்துக்குடியில் கஞ்சா வேட்டை... வாகன சோதனையில் சிக்கிய இளைஞர்கள் - 2 கிலோ கஞ்சா பறிமுதல்!
தூத்துக்குடி வடபாகம் போலீசார் இன்று நடத்திய தீவிர வாகன தணிக்கையின் போது இந்த விற்பனை கும்பல் பிடிபட்டுள்ளது.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆவுடையப்பன் தலைமையிலான போலீசார், இன்று அமெரிக்கன் மருத்துவமனை சந்திப்பு அருகே தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாகச் சந்தேகத்திற்கிடமான முறையில் ஒரு இருசக்கர வாகனம் வந்தது. போலீசார் அந்த வாகனத்தை நிறுத்திச் சோதனை செய்தபோது, அதில் வந்தவர்கள் தூத்துக்குடியைச் சேர்ந்த ஜெபஸ்டின் (25) மற்றும் ஜெய் ஆனந்த் (21) என்பது தெரியவந்தது.

போலீசார் அவர்கள் வைத்திருந்த பையைச் சோதனையிட்டபோது, விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை கண்டுபிடித்தனர். இதனையடுத்து, அவர்களிடமிருந்த கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஜெபஸ்டின் மற்றும் ஜெய் ஆனந்த் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? இதன் பின்னணியில் உள்ள மொத்த வியாபாரிகள் யார்? என்பது குறித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
