வெங்காய மூட்டையில் கஞ்சா கடத்தல்… பெண் உட்பட 2 பேர் கைது!

 
வெங்காய மூட்டை
 

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் வெங்காய வர்த்தகம் என்ற பெயரில் கஞ்சா கடத்திய கும்பலை போலீசார் பிடித்தனர். மதனப்பள்ளி பகுதியில் நடந்த வாகன சோதனையில் பதிவு எண் இல்லாத லக்கேஜ் ஆட்டோ ஒன்றை போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ஆட்டோவில் இருந்த வெங்காய மூட்டைகளை திறந்து பார்த்ததில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதில் பெண் ஒருவர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் 179 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் ரூ.44.65 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மதனப்பள்ளி பகுதியை சேர்ந்த நாகராஜா (23), சுகுணா (29) என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தில் மேலும் 4 பேர் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் எங்கிருந்து கஞ்சா வாங்கினர், எந்த பகுதிகளில் விற்பனை செய்தனர், பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!