ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த ஒரு வருட கண்காணிப்பில் அதிரடி!

 
கஞ்சா

தென்னிந்தியாவின் மிக முக்கியமான ரயில் நிலையமான சென்னை சென்ட்ரலில், பயணிகளின் பாதுகாப்பு மற்றும் கடத்தலைத் தடுக்க ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) மற்றும் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2025 ஆண்டில்  மட்டும் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விவரம் பிரமிக்க வைக்கிறது: சுமார் 205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ₹1 கோடியே 3 லட்சம் ஆகும். இது தொடர்பாக 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கடத்தலில் ஈடுபட்ட 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கஞ்சா

கஞ்சா தவிர, சுமார் ₹2 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ அபின் (Opium) கடத்தி வந்த ஒருவரும் பிடிபட்டுள்ளார். ஆந்திரா, ஒடிசா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் கஞ்சா கடத்தல் அதிகரித்துள்ளதால், மோப்ப நாய்கள் உதவியுடனும், எக்ஸ்-ரே ஸ்கேனர்கள் மூலமும் பயணிகளின் உடமைகள் தீவிரமாகச் சோதிக்கப்படுகின்றன.

சந்தேகப்படும்படியான நபர்களை ரகசியமாகக் கண்காணித்து வரும் ரயில்வே பாதுகாப்புப் படையினர், வரும் காலங்களில் இத்தகைய சோதனைகளை மேலும் வலுப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!