அண்ணனுக்கு உதவ முடியாது... நடிகர் பிரபுவின் முடிவு சரியானதே... சினிமா விமர்சகர் பரபரப்பு பேட்டி!

 
சிவாஜி

 நடிகர் சிவாஜி கணேசன் வீட்டுக்கான ஜப்தி உத்தரவை நீக்கக் கோரி, நடிகர் பிரபு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி அப்துல் குத்துாஸ் முன்,  விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் நடிகர் பிரபு தரப்பில், "என் சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு, என் சொத்தை ஜப்தி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தேன். அது எவ்வாறு முறையாகும்? சகோதரர் குடும்பம் வாங்கிய கடனுக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்?' என வாதம் முன்வைக்கப்பட்டது.  பிரவு வாதம் குறித்து,  சினிமா விமர்சகர் ராஜகம்பீரன், 150 கோடி மதிப்பு இருக்கக்கூடிய, தி.நகரில் அரண்மனை போன்ற வீடு இருக்கக்கூடிய, நடிப்பில் ஈடு இணை சொல்ல முடியாத சிவாஜி கணேசனின் புகழை, மரியாதையை அடுத்த தலைமுறையினர் காப்பாற்ற வேண்டும் என ரசிகர்கள் எல்லாம் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.  இதற்கு எந்தவகையிலும் பொருத்தமில்லாமல், ராம்குமார் போன்றோர் இந்த 3 கோடி கடன் மட்டுமல்ல, பல இடங்களில் கடன் வாங்கி வைத்துள்ளார்.  பாஜகவிலும் ராம்குமார் இணைந்தார்..

சிவாஜி

குடும்பத்தின் புகழை, கவுரவத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லவிட்டாலும் பரவாயில்லை, கீழ்நிலைமைக்கு கொண்டு போய்விடக்கூடாது.. சாந்தி தியேட்டர் இடித்தபோது, "தியேட்டரை இடித்து காம்ப்ளக்ஸ் கட்டுகிறோமே தவிர, நாங்கள் அப்படியே விட்டுட மாட்டோம், காம்ப்ளக்ஸ்க்குள்  தியேட்டர் கட்ட போகிறோம், சிவாஜிக்கு சிலை வைக்க போகிறோம்" என பிரபு கூறியிருந்தார்.  ரசிகர்களிடம் அதிருப்தி வந்துவிடக்கூடாதே என்பதற்காக கூறப்பட்ட வார்த்தை தான்.  10 ஆண்டு காலமாக அப்படி எதுவுமே நடக்கவில்லை.. 150 கோடி சொத்து - 3 கோடி கடன் 150 சொத்து, 3 கோடி கடனுக்காக ஜப்தி செய்வது பெரிய அவமானகரமான விஷயம்.. இதனை அரசாங்கமோ, நடிகர் சங்கமோ காப்பாற்ற முடியாது.. இது தனிப்பட்ட விவகாரம்... அண்ணன் வாங்கிய கடனுக்கு, தான் பொறுப்பேற்க முடியாது என்று பிரபு தற்போது எடுத்துள்ள முடிவு சரியானது தான். 

சிவாஜி

நடிகர் சிவாஜி கணேசன், அடித்தட்டு இடத்திலிருந்து  எல்லா துன்பங்களையும் நிஜ வாழ்க்கையில் பெற்றவர்.. பிரபு முடிவு சரியானதே எம்ஜிஆர் உட்பட பல தலைவர்களுக்கு வாரிசு இல்லையே என்ற நிலைமை இருந்தது. ஆனால் சிவாஜிக்கு வாரிசு இருந்தும் 3 தலைமுறைகூட தாண்ட முடியவில்லை. நேற்று பிரபு எடுத்துள்ள முடிவு சரியானதே. 90'களில், ஒரு நாள், இரவு நேரத்தில் சிவாஜிக்கு நெஞ்சு வலி வந்துவிட்டது. அப்போது அவரது அருகில் யாரும் இல்லை..  செல்போனும் இல்லாத காலம்.. சிவாஜியே தட்டுத்தடுமாறி எழுந்து லேன்ட்லைனில்  குடும்ப டாக்டரை வரவழைத்துள்ளார்.. அந்த டாக்டர் உடனடியாக வந்து சிவாஜியின் உயிரை காப்பாற்றியிருக்கிறார். கடைசி காலத்தில் மிகப்பெரிய தனிமையில் சிவாஜி கணேசன் இருந்தபோது, இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

சிவாஜிக்கு நெஞ்சுவலி "தன்னந்தனியாக பெரிய வீடு கட்டி வாழ கூடாது.. சின்ன வீட்டில் இருந்தால், நெஞ்சு வலி என்றாலும், என்ன ஏதென்று பக்கத்தில் யாராவது கேட்பாங்க.. பெரிய வீடு என்றால், ஏசி ரூமில் பூட்டிக்கொண்டு இருந்தால், அங்கு யாருமே காப்பாற்றுவதற்கு கூட இருக்க மாட்டார்கள். அப்படித்தான் நான் சாகறதுக்கு இருந்தேன்.. இவ்வளவு பெரிய வீட்டை கட்டியிருக்க கூடாது" என சிவாஜி கணேசன் அப்பவே வாக்குமூலமாக தந்திருந்தார். இப்போது ஜப்தி வரை கொண்டுவந்துவிட்டார்கள் அவரது வாரிசுகள்" என தர்மசங்கடத்துடன் தெரிவித்துள்ளார்.
 

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web