120 கி.மீ வேகத்தில் சிகரெட்டுடன் ஓட்டிய கார் விபத்தில் 4 இளைஞர்கள் பலி... 6 பேர் படுகாயம்!
அகமதாபாத்தில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் கையில் சிகரெட்டுடன் இளைஞர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. உதைப்பூர் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை நடந்த இந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
#Udaipur, Ahmedabad Hwy 🚨⚠️
— Dave (Road Safety: City & Highways) (@motordave2) January 19, 2026
Too Swift desires at 120kmph+
1. Smoking 🚬 while driving
2. Seat belt lights ON
3. Infotainment with Video Clip running
4 Dead, 2 injured#DriveResponsibly⚠️ @DriveSmart_IN @dabir @abhi_kulkarni85
pic.twitter.com/0BP9rh70qX
அதிவேகமாக வந்த கார் எதிரே வந்த மற்றொரு காரின் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டன. வாகனங்களில் சிக்கியவர்களை மீட்க காரின் பாகங்களை உடைத்து மீட்புப் படையினர் செயல்பட்டனர்.
விபத்தில் முகமது அயன், அதில் குரேஷி, ஷேர் முகமது, குலாம் க்வாஜா ஆகியோர் உயிரிழந்தனர். நண்பரின் பிறந்தநாளைக் கொண்டாட வெளியே சென்ற போது இந்த விபத்து நடந்ததாக கூறப்படுகிறது. காரில் எடுக்கப்பட்ட வீடியோவில் சீட் பெல்ட் அணியாததும், வேகமாக செல்லும் காரை குறைக்குமாறு ஒருவர் கத்துவதும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
