கார் , லாரி மீது நேருக்கு நேர் மோதி கோர விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் பலி!
ஆந்திரா ஸ்டுவர்ட்டுபுரத்தில் வசித்து வரும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர் காரில் நந்தியாலா மாவட்டம் மகாநதி கோயிலுக்கு சென்றிருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்த போது கார் பிரகாசம் மாவட்டம் தடி செர்லா மோட்டு என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியது.

அப்போது எதிர்த்திசையில் வந்து கொண்டு இருந்த லாரியின் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். 2 குழந்தைகள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். இந்த கோர விபத்து குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் உயிரிழந்த 6 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆந்திர மாநில அமைச்சர் கொட்டிபாடி ரவிக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் காயமடைந்தவருக்கு உயர் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
