பகீர் சிசிடிவி!! அதிவேகமாக வந்த கார்... தூக்கி வீசப்பட்ட பைக்!! தந்தை பலி!! மகன் கவலைக்கிடம்!!

 
கார் விபத்து

இரு சக்கர வாகனங்களில் பயணம் செய்யும் போது நாம்  ஒழுங்காக சீரான வேகத்தில் சென்றாலும் எதிரில் வருபவர் தாறுமாறாக வந்தால் அதோ கதி தான். இளசுகள் பலரும் பைக், கார் எது ஓட்டினாலும் மிதமிஞ்சிய ஜெட் வேகம் தான். இப்படி செல்வது தனக்கான ஆபத்து மட்டுமல்ல எதிரில் வருபவர்களின் உயிரையும் பணயம் வைக்கிறோம் என்பதை உணர்வதே இல்லை. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வசித்து வருபவர்  ஜாகிர் உசேன்.


 

இவர்   தன்னுடைய மகன்  15 வயது அஜ்மலை  திருச்சியில் நடைபெறும்  கபடி போட்டியில் பங்கு பெறுவதற்காக பயிற்சியாளரிடம் கொண்டு போய் விட தன்னுடைய   இரு சக்கர வாகனத்தில்  தனது மகனை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.  கோவை மாவட்டம் கே.ஜி.சாவடி பகுதியில் ஜாகிர் உசேன் சென்றுகொண்டிருந்த நிலையில், அப்பகுதியில், அதி வேகமாக வந்த கார் பைக் மீது தாறுமாறாக மோதியது.

இந்த கோர விபத்தில் தந்தை ஜாகிர் உசேன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக  உயிரிழந்த நிலையில், அவருடைய மகன் அஜ்மல் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள்  சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.   வீடியோக்களை பார்த்த பலரும் சாலை விதிகளை மதிக்காமல் வந்த  காரின் தவறு, பைக்கில் பயணம் செய்தவர்களின் உயிரில் விளையாடியுள்ளது எனத் தெரிவித்துள்ளனர். அத்துடன்   கார் ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு செய்யவேண்டும் எனவும் பதிவிட்டு வருகின்றனர். 

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பொலிவான பிரகாசிக்கும் சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!