கார் மரத்தில் மோதி வாய்க்காலில் தொங்கி 4 பேர் படுகாயம் ... தரிசனம் முடிந்து திரும்பியபோது சோகம்!

 
விபத்து
 

திருச்சி மாவட்டம் முசிறி அருகே தரிசனம் முடித்து வீடு திரும்பிய இளைஞர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. கார் மரத்தில் மோதி வாய்க்காலில் விழாமல் அந்தரத்தில் தலைகீழாக தொங்கியதால் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் காயமடைந்தனர். அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ஆம்புலன்ஸ்

ஆலமரத்துப்பட்டியை சேர்ந்த தினேஷ், சங்கர், தமிழ்ச்செல்வன், ஹரிஷ் ஆகியோர் நேற்று அதிகாலை காரில் சமயபுரம் கோயிலுக்கு வந்தனர். தரிசனம் முடிந்து காலை 7.30 மணியளவில் மீண்டும் ஊருக்கு புறப்பட்டனர். திருச்சி-நாமக்கல் நெடுஞ்சாலையில் சந்தப்பாளையம் அருகே சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பு கம்பியை உடைத்து மரத்தில் மோதியது.

போலீஸ்

இந்த விபத்தில் காரின் முன்பகுதி சேதமடைந்தது. காரை ஓட்டிய தினேஷுக்கு கால் முறிவு ஏற்பட்டது. மற்ற மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் அவர்களை மீட்டு முசிறி தனியார் மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து முசிறி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க ராசிக்கேற்ற தொழில் எது? இந்த துறை அதிக லாபம் தரும்

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!