பைக் மீது கார் மோதி கோர விபத்து.. அதி​முக பிர​முகர் உள்பட 3 பேர் உயி​ரிழப்பு!

 
கடலூர்

கடலூர் அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் அதிமுக பிரமுகர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். கடலூர் அருகே எம்.புதூரைச் சேர்ந்தவர் நேரு (60), அதிமுக கிளை செயலாளரான இவர் நேற்று காலை தனது முந்திரி தோப்பில் முந்திரி கொட்டைகள் பொறுக்குவதற்காக, நாகியநத்தம் பகுதியைச் சேர்ந்த சரண்யா (25), கல்பனா (25) ஆகியோரை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு ராமாபுரம் அருகே உள்ள விழுப்புரம் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார்.

ஆம்புலன்ஸ்

அப்போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் 3 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த சரண்யா, கல்பனா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த நேருவை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டது.

போலீஸ்

இதற்கிடையில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விபத்து நடந்த இடத்திற்கு சென்று 2 உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?