பைக் மீது கார் மோதி விபத்து... காவலாளி பலியான சோகம்!

தூத்துக்குடி மாவட்டத்தில் பைக் மீது கார் மோதி கோர விபத்திற்குள்ளானதில் காவலாளி பரிதாபமாக உயிர் இழந்தார்.
தூத்துக்குடி போல்டன் புரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் துரைசிங்கம் (58), இவர் முக்காணியில் உள்ள ஹோட்டலில் இரவு வாட்ச்மேன் ஆக வேலை பார்த்து வருகிறார்.
நேற்றிரவு வேலைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து தனது பைக்கில் புறப்பட்டு தூத்துக்குடி -திருச்செந்தூர் ரோடு முத்தையாபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த கார் இவரது பைக் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்கு பதிவு செய்து, காரை ஓட்டி வந்த நாகர்கோவில் நாவல்காடு மேல தெருவைச் சேர்ந்த சோமு மகன் முருகன் (42) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!