கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து... தாய்-மகன் உயிரிழப்பு!

 
குழந்தை உயிரிழப்பு
மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய்-மகன் உயிரிழந்தனர். 

சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த சித்தன் மகன் ராஜ்குமார் (35). இவர் மொபைல் சர்வீஸ் சென்டரில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது மனைவி தமிழரசி (26), மகன் அஸ்வரதன் (5) மற்றும் குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒரு காரில் நேற்று இரவு புறப்பட்டு திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். காரை ராஜ்குமார் ஓட்டினார்.

கார் நேற்று அதிகாலை மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டயபுரம் அருகே உள்ள துரைச்சாமிபுரம் விலக்கு பகுதியில் சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜ்குமாரின் மனைவி தமிழரசி, அவரது மகன் அஸ்வரதன் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு..!!

மேலும் காரில் சென்ற அண்ணாமலை மனைவி விஜயா (60) செல்வராஜ் மனைவி தாமரைச் செல்வி என்ற சந்தியா (31), மகன் சபரீசன் (12), சித்தன் மகள் சுமதி (46), கோவிந்தராஜ் மகள் ரம்யா (12), காரை ஓட்டி சென்ற ராஜ்குமார் (35) ஆகியோர் படுகாயமடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்த எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் மாதவராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இருவர் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?

From around the web