போடிமெட்டு மலைப்பாதையில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றியது... படுகாயங்களுடன் 4 பேர் மீட்பு!

கர்நாடகா மாநிலம் பெங்களூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் கிஷோர்குமார்(44). இவர் தனது மனைவி நித்யா (35), மகன்கள் ஜோஸ்வா(14) ஜோயல்(11) ஆகியோருடன் காரில் மூணாறுக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
மூணாறு பகுதியில் சுற்றிப் பார்த்து விட்டு அங்கிருந்து நேற்று மாலை தேவிகுளம், பூப்பாறை வழியே போடிமெட்டு நோக்கி காரில் சென்றுக் கொண்டிருந்தார்.
தமிழக எல்லையான போடிமெட்டு அருகே உள்ள கேரளா கலால் சோதனைச் சாவடி அருகே சென்றுக் கொண்டிருந்த போது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து திருப்பத்தில் தடுமாறியதில் 60 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.
இதைக் கண்ட பிற வாகன ஓட்டிகளும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் உடனடியாக அவர்களை மீட்க முயற்சித்தனர். திடீரென கீழே விழுந்த கார் தீப்பற்றி எரிய துவங்கியது. இது குறித்து தகவலறிந்து நெடுங்கண்டம், மூணாறில் இருந்து தீயணைப்புத்துறை ஊழியர்கள் மீட்புப்பணிக்காக வந்தனர். இருப்பினும் கார் முற்றிலும் எரிந்தது.
இந்த விபத்தில் நித்யாவுக்கு இடது கை மற்றும் தோள்பட்டையிலும், கிஷோர் குமாருக்கு தொடையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. இதே போல் ஜோஸ்வாவிற்கு இடது காலில் எலும்பு முறிவும், முதுகில் பின்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது.
நான்கு பேரும் போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!