திருப்பதி அருகே சாலையில் கவிழ்ந்த கார்.. 2 பேர் பலி... 3 பேர் படுகாயம்!

 
சாலையில் கவிழ்ந்த கார்
 


 
ஆந்திர மாநிலத்தில் திருப்பதி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிழந்ததாக தகவல் தெரிவித்துள்ளனர். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து மஞ்சுநாத் என்பவர் தனது குடும்பத்துடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். 

இவர்கள் கார் புத்தலப்பட்டு – நாயுடுப்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் சந்திரகிரி மண்டலத்தில் உள்ள காசிபண்டலா என்ற இடத்தில் குறுக்கே மற்றொரு வாகனம் வந்ததால் அதன்மீது மோதாமல் இருக்க முயற்சித்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் தலைகீழாக கவிழ்ந்தது.

கார் கவிழ்ந்த விபத்தில் மஞ்சுநாத் தந்தை கரிகவுடா. அவருடைய அக்கா மகன் 6 வயது நூதன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுத்து படுகாயம் அடைந்த மஞ்சுநாத், அவரது அக்கா மற்றும் அவரது தாய் ஆகியோரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருப்பதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து  வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?