பெரும் சோகம்... மின் கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்த கார்!

தமிழகத்தில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழ கள்ளந்திரியில் வசித்து வருபவர் 60 வயது தேவராஜ். இவர் திண்டுக்கல்லில் உள்ள தனது உறவினரை சந்திப்பதற்காக வாடகை கார் மூலம் கீழ கள்ளந்திரியில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்றிருந்தார். காரை மதுரை வண்டியூர் யாகப்பா நகரில் வசித்து வரும் மகாராஜன் 21 வயது மகன் சக்திவேல் என்பவர் ஓட்டி வந்தார்.
கார், மதுரை துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் நத்தம் வழியாக பள்ளப்பட்டி பிரிவு அருகே உள்ள மேம்பாலத்தில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் கார் தலைகுப்புற கவிழ்ந்தது.
கார் மோதிய வேகத்தில் மின் கம்பம் அடியோடு சாய்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் ஏர்பேக் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக 2 பேரும் லேசான காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர். படுகாயமடைந்த 2 பேரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இச்சம்பவம் குறித்து நத்தம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!